
மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிட்டே பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி.
இருவரும் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை ஆம்னி காரில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இரண்டு பேரும் உடனே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினர். சில நிமிடங்களில் காரில் தீ மளமள என பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.