தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புயலில் உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி! - மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் ஃபென்ஜால் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி

News image
மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :4 டிசம்பர் 2024, 11:32 am

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபென்ஜால் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வயது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரும் சென்றனர்.

இருவரில் அண்ணாமலை பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலையின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடவும், அவரின் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.