கழிவுநீர் கலப்பு: பல்லாவரத்தில் 2 பேர் பலி; 33 பேர் உடல்நலம் பாதிப்பு

குடிநீருடன் கழிவுநீர் கலந்த சம்பவத்தில் பல்லாவரம் பகுதியில் 2 பேர் பலி;
பல்லாவரம் மருத்துவமனை
பல்லாவரம் மருத்துவமனை
Published on
Updated on
1 min read

சென்னையை அடுத்த பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவந்த சம்பவத்தில், 2 பேர் பலியாகினர். 33 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால், அதனைக் குடித்த அப்பகுதி மக்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருவீதி (54), மோகன்ராம் (43) ஆகியோர் பலியாகினர். இதில் திருவீதி மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தற்காலிகமாக இங்கு வாழ்ந்து வந்தவர் என்பதும், மோகனரங்கம் பல்லாவரத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் வாழ்ந்து வந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனை தரப்பில் கூறப்படுவதாவது, பல்லாவரம் கண்டோன்மென்ட், மலைமேடு, காமராஜ் நகர் பகுதிகளில் பலரும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளுடன் நேற்று இரவு முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த உடல்நலப் பாதிப்புக்கு பெரும்பாலும் உணவு விஷமானது அல்லது குடிநீரில் மாசு கலந்ததுதான் காரணமகா இருக்கும். ஆனால், உயிரிழந்தவர்களின் உடல் கூறாய்வு வந்த பிறகே உண்மைக் காரணம் தெரிய வரும் என்கிறார்கள்.

இதுவரை 35 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 18 அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் மிக மோசமான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் பகுதி மக்கள், வரலட்சுமி (88) என்ற பெண்மணியும் பலியானதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனை ஊழியர்களோ இதுவரை 2 பேர் மட்டுமே பலியானதாகக் கூறுகிறார்கள். இவர்கள்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானார்கள். வரலட்சுமி, வயோதிகம் சார்ந்தஉடல்நலப் பிரச்னையால்தான் பலியானார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

எங்கள் பகுதி குடிநீருடன், அக்கம் பக்கத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com