
சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? தற்கொலைக்கான காரணம் என்ன? பணிச்சுமையா? கடன் தொல்லையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூரில் வசித்து வந்த செந்தில்வேல் செங்கல்பட்டு வணிக வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், வணிக வரித்துறை அதிகாரி செந்தில்வேலை காணவில்லை என்று உறவினர்கள் போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அவரை காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவரது உடல் போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியிலிருந்து மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பின்பே அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.