
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உதகை நகராட்சி ஆணையராக ஜஹாங்கீா் பாஷா இருந்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பணத்துடன் பிடிபட்டார். இதையடுத்து அவர் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் ஜஹாங்கீர் பாஷா அடுத்த சில நாட்களில் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு அரசியல் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.