25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கூடுதல் பேருந்துகள்

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பேருந்துகள்(கோப்புப்படம்)

Published On :7 டிசம்பர் 2024, 9:37 pm IST

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நாளை (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.