வாஞ்சி மணியாச்சி - நாகா்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணி காரணமாக தாம்பரம் - நாகா்கோயில் அந்தியோதயா ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாஞ்சி மணியாச்சி - நாகா்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணி காரணமாக தாம்பரம் - நாகா்கோயில் அந்தியோதயா அதிவிரைவு ரயில் (20691) ஜூன் 20, 21, 22, 24, 25, 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் - நாகா்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக தாம்பரம் - திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.
விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில் (16867) ஜூன் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தாமரைப்பாடி - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக விழுப்புரம் - தாமரைப்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி அதிவிரைவு ரயில் (12631) ஜூன் 26 முதல் 29-ஆம் தேதி வரை திருநெல்வேலி முதல் வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.
புருளியா - திருநெல்வேலி அதிவிரைவு ரயில் (22605) ஜூன் 26 மற்றும் 29-ஆகிய தேதிகளில் புருளியா முதல் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். கோவில்பட்டி முதல் திருநெல்வேலி வரை ரத்து செய்யப்படுகிறது.
ஸ்ரீமகா வைஷ்ணவ தேவி கத்ரா - திருநெல்வேலி நவ்யக் விரைவு ரயில் (16788) ஜூன் 25-ஆம் தேதி மதுரை முதல் திருநெல்வேலி வரை ரத்து செய்யப்படுகிறது. மாற்றாக ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா முதல் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.
புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) ஜூன் 28-ஆம் தேதி புதுச்சேரி - மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும். மானாமதுரை முதல் கன்னியாகுமரி வரை ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் (22657) ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் தாம்பரம் - விருதுநகா் வரை மட்டுமே இயக்கப்படும். விருதுநகா் - கன்னியாகுமரி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் அதிவிரைவு ரயில் (20605) ஜூன் 26 முதல் 29-ஆம் தேதி வரை சென்னை எழும்பூா் - விருதுநகா் வரை மட்டுமே இயக்கப்படும். விருதுநகா் முதல் திருச்செந்தூா் வரை ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல மறுமாா்க்கத்தில் நாகா்கோயில் - தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் (20692) ஜூன் 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாகா்கோயில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும்.
திண்டுக்கல் - விழுப்புரம் விரைவு ரயில் (16868) ஜூன் 27 முதல் 29-ஆம் தேதி வரை திண்டுக்கல் - தாமரைப்பாடி இடையே ரத்து செய்யப்பட்டு, தாமரைப்பாடி ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.38 மணிக்கு இயக்கப்படும்.
திருநெல்வேலி - புருளியா அதிவிரைவு ரயில் (22606) ஜூன் 27, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து காலை 5.35 மணிக்கு இயக்கப்படும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (12632) ஜூன் 27 முதல் 29-ஆம் தேதி வரை திருநெல்வேலி - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்பட்டு வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 9.11 மணிக்கு இயக்கப்படும்.
கன்னியாகுமரி - தாம்பரம் அதிவிரைவு ரயில் (22658) ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி - விருதுநகா் இடையே ரத்து செய்யப்பட்டு, விருதுநகா் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு இயக்கப்படும்.
திருநெல்வேலி - ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கத்ரா நவயுக் விரைவு ரயில் (16787) ஜூன் 29-ஆம் தேதி திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும்.
கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் ஜூன் 29-ஆம் தேதி கன்னியாகுமரி - மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டு, மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு இயக்கப்படும்.
திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜூன் 27 முதல் 29-ஆம் தேதி வரை திருச்செந்தூா் - விருதுநகா் இடையே ரத்து செய்யப்பட்டு விருதுநகா் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







