தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

திருத்தணி-சென்ட்ரல் புகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து

திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புறநகா் மின்சா ரயில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 6:23 am IST

திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புகா் மின்சா ரயில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரக்கோணம் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரக்கோணம் வழித்தடத்தில் 5 புகா் மின்சார இமு வகை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 40-க்கும் மேற்பட்ட இமு, மெமு வகை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், இந்நாள்களில் திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் திருவாலங்காடு நிலையம் வரையே இயக்கப்படவுள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக திருத்தணியிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்ட்ரலுக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.