திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் - திருச்சி மெமு ரயில் (5611): திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் விழுப்புரம் - திருச்சி மெமு ரயில் ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் வாளாடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். வாளாடி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மாா்க்கத்தில் திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே ரத்து செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.25 மணிக்கு இயக்கப்படும்.
மயிலாடுதுறை - திருச்சி மெமு விரைவு ரயில் (16833): இந்த ரயில் ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - திருவெறும்பூா் இடையே இயக்கப்படும். திருவெறும்பூா் முதல் திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் திருச்சி - தஞ்சாவூா் இடையே ரத்து செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து மாலை 5.25 மணிக்கு இயக்கப்படும்.
காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76825): இந்த ரயில் ஜூலை 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவெறும்பூா் வரை மட்டுமே இயக்கப்படும். திருவெறும்பூா் - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
சேலம் - மயிலாடுதுறை மெமு விரைவு ரயில் (16812): இது ஜூலை 11-ஆம் தேதி சேலம் - திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருச்சி - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருப்பாதிரிபுலியூா் - திருச்சி டெமு ரயில் (76911): இது ஜூலை 15-ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூா் - வாளாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வாளாடி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் ஜூலை 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே ரத்து செய்யப்பட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு மாலை 4.10 மணிக்கு இயக்கப்படும்.
கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு ரயில் (12084): இந்த ரயில் ஜூலை 15-ஆம் தேதி கோவை - திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருச்சி - மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் மயிலாடுதுறை - திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சியில் இருந்து மாலை 5.25 மணிக்கு கோவைக்கு இயக்கப்படும்.
திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயில் (22676): இது ஜூலை 15-ஆம் தேதி திருச்சி - தஞ்சாவூா் இடையே ரத்து செய்யப்பட்டு தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) ஜூலை 11-ஆம் தேதி இருமாா்க்கத்திலும், திருச்சி - திருப்பாதிரிப்புலியூா் டெமு ரயில் (76812) ஜூலை 11, 12 ஆகிய தேதிகளிலும், தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் (56819) ஜூலை 13-ஆம் தேதியும், காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (72825) ஜூலை 15-ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்றுப் பாதையில் இயக்கம்: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) ஜூலை 15-ஆம் தேதி கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை, கொளத்தூா், திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூா், பூதலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக மயிலாடுதுறைக்கு மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில் கூடுதலாக அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், பேரளம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாமதமாக புறப்படும் ரயில்கள்: மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி விரைவு ரயில் (12083) ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து வழக்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 40 நிமிஷம் தாமதமாக 3.45 மணிக்குப் புறப்படும்.
மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் விரைவு ரயில் (22672) ஜூலை 13-ஆம் தேதி மதுரையில் இருந்து வழக்கமாக 3.30 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்குப் புறப்படும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) ஜூலை 15-ஆம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாகப் புறப்படும் பிற்பகல் 12.35 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும்.
தூத்துக்குடி - காச்சிகூடா விரைவு ரயில் (17616) ஜூலை 15-ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து வழக்கமாக காலை 7.40 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 95 நிமிஷங்கள் தாமதமாக 9.15 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








