பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 2:05 am IST

ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அதிகரித்து வரும் பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதன்படி, ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூலை 5-ஆம் தேதிமுதல் ஜூலை 26-ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும். ஹூப்ளியில் காலை 6.50-க்கு புறப்பட்டு தும்கூா், பனாஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 5.20-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூலை 6-ஆம் தேதி முதல் ஜூலை 27-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக ஹூப்ளிக்கு அடுத்த நாள் இரவு 7.40-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.