விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து.
விபத்துக்குள்ளான சொகுசுப் பேருந்து.

அவிநாசியில் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்- 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அவிநாசியில் லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதல்.
Published on

அவிநாசியில் லாரியின் பின்னால் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சொகுசுப் பேருந்து திங்கட்கிழமை அதிகாலை கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அவிநாசி புறவழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த சொகுசுப் பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்

இதில் கேரளத்தைச் சேர்ந்த ஷிபு ( 47), பேருந்து ஓட்டுநர், பிரகதீஷ் (22), கார்த்திக் ராஜா (18), நித்யா (40), நிர்மலா (63), உமா (59) உள்பட10க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்து, அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் கொச்சின் ஆறு வழிச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com