கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது! இன்று வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

2024 ஆம் ஆண்டிற்கான 'வைக்கம் விருது' கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Devanoora Mahadeva
எழுத்தாளர் தேவநூர மஹாதேவா
Published on
Updated on
1 min read

2024 ஆம் ஆண்டிற்கான 'வைக்கம் விருது' கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, 2024-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ, சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதல்வரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை (12/12/2024) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. பங்கேற்று நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு, வைக்கம் நகரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள விழாவில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். அங்குள்ள பெரியார் நினைவகம், நூலகம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்வில் இரு மாநில முதல்வர்களும் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கேரள தேவஸ்தான துறை அமைச்சர் வி.என்.வாசவன், இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர். தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வரவேற்புரையும், கேரள மாநில தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.

முதல்வருக்கு வரவேற்பு: இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார். கொச்சி விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு, கேரள மாநில திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கேரள அரசு சார்பிலும் வரவேற்பு} மரியாதை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com