தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில்(பகல் 1 மணி நிலவரப்படி) 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புயல் சின்னங்களால் கனமழை பெய்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, தாமிரவருணி ஆற்றில் 50 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:
கடனா அணை 260 மி.மீ.
ஊத்து 230 மி.மீ.
நாலுமுக்கு 220 மி.மீ.
தூத்துக்குடி விமான நிலையம் ஏஆர்ஜி 210 மி.மீ.
காக்காச்சி 190 மி.மீ.
மாஞ்சோலை 180 மி.மீ.
தூத்துக்குடி 160 மி.மீ.
ராமநதி அணைப்பகுதி 150 மி.மீ.
கோடியக்கரை 150 மி.மீ.
பாபநாசம் 150 மி.மீ.
நீடாமங்கலம் 140 மி.மீ.
செங்கோட்டை 140 மி.மீ.
குண்டாறு 140 மி.மீ.
சேர்வலாறு 140 மி.மீ.
ஒரத்தநாடு 130 மி.மீ.
விருதுநகர் 130 மி.மீ.
குருங்குளம் 130 மி.மீ.
காயல்பட்டினம் 120 மி.மீ.
புள்ளம்பாடி 110 மி.மீ.
சாத்தூர் 110 மி.மீ.
சாத்தான்குளம் 110 மி.மீ.
சிவகாசி 110 மி.மீ.
சாத்தன்குளம் ஏஆர்ஜி 110 மி.மீ.
தேக்கடி 100 மி.மீ.
அருப்புக்கோட்டை 100 மி.மீ.
கல்லிக்குடி 100 மி.மீ.
இதனிடையே, வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


