அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது! -இபிஎஸ்

“திமுக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை”: அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பறிபோனது! -இபிஎஸ்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக 2 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியை இழந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “உண்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1,98,369 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை. திமுக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. 23 தொகுதிகளில் வெறும் 50,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால் அதிமுக வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருப்பார்கள்.

கடந்த மக்களவை தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் இல்லை, அதிமுக தரப்பிலிருந்து பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பும் இல்லை, அப்படியிருந்தும் 20.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம். ‘கூட்டணி’ வரும் போகும், ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் நிலையானது. தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X