கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சென்னை திரும்பிய குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு!

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
சென்னையில் குகேஷ்.
Updated On :16 டிசம்பர் 2024, 8:44 am

DIN

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் அண்மையில் சாம்பியன் பட்டம் வென்றார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 13 சுற்றுகள் வரை டிங் லிரென் - குகேஷ் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனால் விறுவிறுப்பாக நடந்த 14வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென்னை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று திங்கள்கிழமை சென்னை திரும்பிய குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் மலர் தூவி குகேஷை வரவேற்றனர். மேலும் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து அவர் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த காரில் புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.