
சென்னை - கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவை வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பி பழுது காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் எண்ணூரில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.