கோப்புப் படம்
கோப்புப் படம்

நீண்டகால நோய் பாதிப்பால் தம்பதியர் தற்கொலை!

சேலத்தில் நோயால் அவதியுற்ற மனைவியுடன் சேர்ந்து கணவரும் தற்கொலை
Published on

சேலத்தில் நோயால் அவதியுற்ற மனைவியுடன் சேர்ந்து கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (70), இவரது மனைவி பொன்னம்மாள் (65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தாலும், இவர்கள் இருவரும் கெங்கவல்லியில் தனியாகத்தான் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பொன்னம்மாளுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு இருந்ததுடன், சில மாதங்களுக்கு முன்பிலிருந்து மூலநோயாலும் அவதியுற்று வந்தார்.

இந்த நிலையில், உடல்நிலை நாளுக்குநாள் மோசமானதால், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சுந்தரராஜனிடம் பொன்னம்மாள் கூறியுள்ளார். தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறிய சுந்தரராஜனும், அவரது மனைவி பொன்னம்மாள் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக வீட்டிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார், சுந்தரராஜனின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

சுந்தரராஜனும் அவரது மனைவியும் மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்து, முதலுதவி அளித்து, பின்னர் அவர்கள் இருவரையும் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com