சென்னை உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது!

உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது.
உதயம் திரையரங்கம்
உதயம் திரையரங்கம்
Published on
Updated on
1 min read

சென்னையின் பிரபலமான உதயம் திரையரங்கம் 40 ஆண்டுகள் கழித்து நிரந்தரமாக முடப்பட்டது.

சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் சென்னையின் வெற்றிகரமான திரையரங்கமாக செயல்பட்டு வந்தது. இந்தத் திரையரங்கம் தொடங்கப்பட்டபோது உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. பின்னர், உதயம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மினி உதயம் என்று 4 வது திரை கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு திரையிலும் சுமார் 700- க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது.

மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக உதயம் திரையரங்கம் விளங்கியது.

ஆனால், சென்னையில் தொடர்ந்து மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அதிகரித்ததாலும், காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதாலும் உதயம் திரையரங்கின் செல்வாக்கு ரசிகர்களிடையே சரியத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, தற்போது திரையரங்கத்தை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதால் உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு திரையிடப்பட்டு வருகின்றன. ரஜினி, கமல், விஜய், அஜித் முதல் இன்றைய நட்சத்திர நடிகர்கள் வரை பலருக்கும் சென்னையின் நினைவுகளில் ஒன்றாக இந்தத் திரையரங்கம் நீடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com