ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடும் பனிமூட்டம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
ஏற்காடு சுற்றுலா தளம்.
ஏற்காடு சுற்றுலா தளம்.
Published on
Updated on
1 min read

ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் திங்கள்கிழமை அதிகாலை முதலே அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டில் தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடி வருவதால் இந்த பனிமூட்டம் அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இன்று காலை நிலவி வந்த பனிமூட்டத்தின் மத்தியில் இங்கிருந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஏற்காடு படகு இல்ல ஏரியில் படர்ந்துள்ள பனிமூட்டத்தை ரசித்தபடி ஏரியின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மேலும் சாலையில் படர்ந்துள்ள பனிமூட்டத்தில் நடந்து சென்றனர். இருப்பினும் இந்த அடர்த்தியான பனிமூட்டத்தினால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.

பகலையும் இரவாக்கும் விதமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

இடை இடையே சாரல் மழையும் பெய்து வருவதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com