
தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.கஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1.000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்ட தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் அரசு தொழில் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
இதன்மூலம், தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் பயனடைவர். தூத்துக்குடி மாவட்ட த்தில் மட்டும் 4680 மாணவியர் பயனடைவர். முன்னதாக அவர், 32 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் வாகனத்தை வழங்கி அவர்கடன் கலந்து உரையாடினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கல்வியில் தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே டாப்பாக இருக்கின்றனர். தமிழ்நாட்டு பெண்கள் டாப்பில் இருப்பதுதான் பெரியார் காண நினைத்த காட்சி. இத்தனை மாணவிகளை காணும்போது திராவிட வழிதோன்றலில் இருந்து வந்தவர் என்பதில் பெருமிதமாக உள்ளது.
சாதி, மத, இன ரீதியாக மக்களை பிரித்து வைக்கும் வழிதோன்றலும் உள்ளது. தற்போது கல்வியை பொறுத்தவரை பெண்களே முன்னிலையில் உள்ளனர். கல்வி கண்களை திறந்துவிட்ட ஆட்சிதான் நீதிகட்சி ஆட்சி. கல்வி புரட்சிக்கு அடித்தளமிட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான். திராவிடம் என்ன செய்தது என சிலர் அறியாமையில் பேசி வருகின்றனர்.
அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வி திட்டத்தை நீதிக்கட்சி கொண்டு வந்தது. பட்டியலின மாணவர்களை அனைத்துப் பள்ளிகளிலும்சேர்க்க நீதிக் கட்சி உத்தரவிட்டது. மகளிருக்கு பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெ. கீதா ஜீவன், அனிதா ஆர.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன், எம்.சி சண்முகையா உள்பட பல பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.