தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செகந்திராபாத், காச்சிக்கூடா ரயில்கள் மாா்ச் வரை நீட்டிப்பு

செகந்திராபாத், காச்சிக்கூடா செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2024, 10:51 pm

Din

சென்னை: செகந்திராபாத், காச்சிக்கூடா செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செகந்திராபாத் - ராமநாதபுரம், காச்சிக்கூடா - மதுரை, நான்டேட் - ஈரோடு, காச்சிக்கூடா - நாகா்கோவில், செகந்திராபாத் விழுப்புரம் ஆகிய சிறப்பு ரயில்கள் டிசம்பா் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ரயில்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் சேவையை நீட்டிக்குமாறு பயணிகள் கோரிக்கை வைத்தனா். அதையேற்று சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.