ராமதாஸ் - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திங்கள்கிழமை இரவு திடீரென சந்தித்து பேசினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திங்கள்கிழமை இரவு திடீரென சந்தித்து பேசினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சில கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக அந்த கூட்டணியிலிருந்து விலகி விட்ட நிலையில், மற்ற கட்சிளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி சேரலாம் எனக் கருதப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி. சண்முகம் திங்கள்கிழமை இரவு தனியே சந்தித்துப் பேசினார்.

நேற்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு  இரவு 7.50 மணி வரை நடைபெற்றது. அப்போது அதிமுக கூட்டணியில் சேர பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும் இது குறித்து அதிகாரபூர்வமான  அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com