ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!அரசுப் பேருந்து பலகையில் தக்காளி வெற்றிக் கழகம்! என்னவானது? போக்குவரத்துக் கழகம் விளக்கம்விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

பாஜகவில் இணைந்தனர் 15 முன்னாள் எம்எல்ஏ-க்கள்

தமிழகத்தைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏ-க்களும், ஒரு முன்னாள் எம்.பி.யும் பாஜகவில் இணைந்தனர்.

News image

பாஜகவில் இணைந்த 16 முன்னாள் தமிழக எம்எல்ஏக்கள்

Updated On :9 பிப்ரவரி 2024, 7:12 pm IST

தமிழகத்தைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏ-க்களும், ஒரு முன்னாள் எம்.பி.யும் பாஜகவில் இணைந்தனர்.
அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி. ஆகியோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் வடிவேல் (அதிமுக-கரூர் தொகுதி), சேலஞ்சர் துரைசாமி (அதிமுக- கோயம்புத்தூர்), பி.எஸ். கந்தசாமி (அதிமுக-  அரவக்குறிச்சி), எம்.வி.ரத்தினம் (அதிமுக-பொள்ளாச்சி), ஆர்.சின்னச்சாமி (அதிமுக- சிங்காநல்லூர்), ஆர்.தங்கவேலு (காங்கிரஸ்-ஆண்டிமடம்), வி.ஆர். ஜெயராமன் (அதிமுக-தேனி), எஸ்.எம். வாசன் (அதிமுக -வேடசந்தூர்), பி.எஸ். அருள் (அதிமுக-புவனகிரி), எஸ்.குருநாதன் (திமுக- பாளையங்கோட்டை), ஆர்.ராஜேந்திரன் (அதிமுக- காட்டுமன்னார்கோவில்), செல்வி முருகேசன் (அதிமுக-காங்கேயம்), ஏ.ரோஹிணி (அதிமுக-கொளத்தூர்), முன்னாள் அமைச்சர் கோமதி ஸ்ரீநிவாசன் (திமுக -வலங்கைமான்), கே. தமிழழகன் (தேமுதிக - திட்டக்குடி), முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் வி.குழந்தைவேலு (திமுக-சிதம்பரம்) ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
ஏற்கெனவே தமிழகத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.இ.வெங்கடாசலம் (அதிமுக-சேலம்), முத்துகிருஷ்ணன் (அதிமுக- கன்னியாகுமரி) ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக பாஜகவுக்கான மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேர்தல் இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன்,  சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், ஓபிசி அணி தமிழக தலைவர் சாய் சுரேஷ், தில்லி தென்னிந்திய அணியைச் சேர்ந்த கே.ஜி.தண்டபாணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். 
மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும். தமிழகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் 370 இடங்களில் பாஜக வெற்றி பெறும்' என்றார்.
எந்தக் கட்சியும் கூட்டணியில் சேரலாம்: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பாஜக கூட்டணியில் ஒரு கட்சி 
(அதிமுக) இணையுமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலில், "பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று எங்களுடன் வருவோருக்கு கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது' என்று கூறினார். அவர் குறிப்பிட்டு எந்தக் கட்சியின் பெயரையும் தெரிவிக்கவில்லை.
இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. திமுக கூட்டணியில் இருந்துகூட யாரும் வரக் கூடாது என்பது கிடையாது. 
எந்தக் கட்சியும் பாஜக கூட்டணியில் இணையலாம். கூட்டணிக்கு அதிமுக வருவதும், வராததும் அதன் விருப்பம் என்றார் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.