தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு: காரணம் என்ன?

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 4:14 am

DIN

கோவை: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2-ஆம் தேதி கோவை சத்தி ரோடு - சங்கனூர் சந்திப்பு அருகே காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால், பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரித்துள்ளார்.

அதனை விடியோ எடுத்த ஷர்மிளா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான தகவலுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 506(ஐ), 509, 66சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோவையின் பெண் பேருந்து ஓட்டுநராக வலம்வந்த ஷர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்தபோது திமுக எம்.பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், அவரை அழைத்து காரை அன்பளிப்பாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.