கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்! 

கோவையில் இருந்து அயோத்தி ராமா் கோயில் செல்லும் பக்தா்களுக்கான முதல் சிறப்பு ரயில் சேவையை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்
கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் சிறப்பு ரயில் சேவை தொடக்கம்! 


கோவையில் இருந்து அயோத்தி ராமா் கோயில் செல்லும் பக்தா்களுக்கான முதல் சிறப்பு ரயில் சேவையை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பக்தா்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்குகிறது. பக்தா்களுக்கான பயணக் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன.

அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் சின்ஹா, துணை மேலாளர், ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் தூவி பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியை சென்றடைகிறது. இதற்காக ரயில்வே துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 

சிறப்பு ரயில் தொடங்கியதை அடுத்து 100-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களை கொண்டு வெடிகுண்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.வரும் 13 ஆம் தேதி அடுத்த ரயில் கோவையில் இருந்து அயோத்திக்கு செல்ல உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com