3 நாள்கள் மக்களவைத் தொகுதி வாரியாக திமுக பிரசாரக் கூட்டங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. 
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் 10 ஆண்டுகால கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசாரத்தில் பங்கேற்று அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024ல் கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக திமுக முன்னணி தலைவர்கள் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் பிரசாரக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலர்கள், கிளைச்செயலர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும். 

சிவகங்கை - ஐ.பெரியசாமி, திருநெல்வேலி - கனிமொழி கருணாநிதி, விழுப்புரம் -ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி - பொன் முத்துராமலிங்கம், கடலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஸ்ரீபெரும்புதூர் - மா.சுப்பிரமணியன், ஈரோடு - அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் - தமிழச்சி தங்கபாண்டியன், கன்னியாகுமரி - ஐ.லியோனி, மயிலாடுதுறை - சபாபதி மோகன், திருவண்ணாமலை - கோவி.செழியன்

கிருஷ்ணகிரி - துரைமுருகன், திருச்சி - டி.ஆர்.பாலு, திருப்பூர் - கே.என்.நேரு, அரக்கோணம் - பொன்முடி, மதுரை - ஆ.இராசா, விருதுநகர் - கனிமொழி, இராமநாதபுரம் - உதயநிதி ஸ்டாலின், வேலூர் - எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி - மா.சுப்பிரமணியன், கோவை - அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல் பொன். முத்துராமலிங்கம், சிதம்பரம் - கோவி.செழியன்

திருவள்ளூர் - துரைமுருகன், தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு, பெரம்பலூர் - பொன்முடி, கரூர் - ஆ.ராசா, புதுச்சேரி ஆர்.எஸ்.பாரதி, பொள்ளாச்சி - திருச்சி சிவா, காஞ்சிபுரம் - எ.வ.வேலு, தருமபுரி - ஜெகத்ரட்சகன், நாகை - எஸ்.எஸ்.சிவசங்கர், தேனி- பொன்.முத்துராமலிங்கம், நீலகிரி - லியோனி, தென்காசி - சபாபதி மோகன், சேலம் - தமிழச்சி தங்கபாண்டியன், ஆரணி - கோவி செழியன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com