மக்களவைத் தேர்தல்: வார் ரூம் அமைத்தது திமுக 

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போதுனாலும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

என்.ஆர்.இளங்கோ எம்பி, அன்பகம் கலை, ஆஸ்டின் ஆகியோர் தலைமையில் இந்த வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாட்டந்தோறும் வார் ரூம் அமைக்கும் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. 

ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் 3 குழுக்களை திமுக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com