திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

மெட்ரோ நிலையப் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 பிப்ரவரி 2024, 5:00 pm

DIN

சென்னை மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் இன்று முதல்‌ ஒரு வார காலத்திற்கு அண்ணா மேம்பாலம்‌ மெட்ரோ ரயில்‌ நிலையம்‌, நுங்கம்பாக்கம்‌ மெட்ரோ நிலையம்‌ மற்றும்‌  ஸ்டேர்லிங்‌ சாலை மெட்ரோ ரயில்‌ நிலையம் ‌ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேத்துப்பட்டில்‌ இருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ காலேஜ்‌ ரோடு, ஹாடேஸ்‌ ரோடு, உத்தமர்‌ காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும்‌ வகையில்‌ செல்லும் ‌(ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்‌.

Story image

இதேபோல்‌, ஜெமினி மேம்பாலத்தில்‌ இருந்து வரும்‌ வாகனங்கள்‌ , உத்தமர்‌ காந்தி சாலை, கோடம்பாக்கம்‌ நெடுஞ்சாலை (டாக்டா்‌ எம்‌.ஜி.ஆர்‌. சாலை) வழியாக வள்ளுவர்‌ கோட்டம்‌ நோக்கி சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌. (மாற்றுப்பாதை - ஒரு வழிப்பாதை).

அமைந்தகரை நோக்கிச்‌ செல்லும்‌ வாகனங்கள்‌ டேங்க்‌ பண்ட்‌ சாலையில்‌ (இடதுபுறம்‌) திரும்பி நெல்சன்‌ மாணிக்கம்‌ சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும்‌ பிற இடங்களுக்குச்‌ செல்லலாம்‌. (எற்கனவே உள்ளபடி).

வள்ளுவர்‌ கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம்‌ நோக்கிச்‌ செல்லும்‌ அனைத்து வாகனங்களும்‌ வள்ளுவர்‌ கோட்டம்‌ சந்திப்பில்‌, வள்ளுவர்‌ கோட்டம்‌ நெடுஞ்சாலை, உத்தமர்‌ காந்தி சாலை வழியாகத்‌ திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம்‌ அல்லது வலதுபுறம்‌ திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம்‌ (ஜெமினி மேம்பாலம்‌) சென்று அடையலாம்‌.

மற்ற பிற உள்பற சாலைகள்‌ அனைத்தும்‌ மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.