கேரள ஆளுநரைத் தொடர்ந்த தமிழக ஆளுநர்!
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது.
எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை முடித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 25-ஆம் தேதி கேரள சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிஃப் கான், மாநில அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையை படிக்காமல், கடைசி பத்தியை மட்டும் 2 நிமிடங்களில் படித்துவிட்டு அமர்ந்தார்.
கேரள ஆளுநரை தொடர்ந்து, தமிழக ஆளுநரும் மாநில அரசின் கொள்கை உரையை புறக்கணித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனிடையே ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.