பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை

பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் (பிப். 17) கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் (பிப். 17) கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கான செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் சனிக்கிழமை (பிப்.17) விண்ணில் ஏவப்பட உள்ளது.

கோப்புப்படம்
செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளானது ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிப்.17-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை மறுநாள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com