தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது.தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது.தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு அறவழிப் போராட்டம்தான். மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட போது கொடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கோயிலை திறப்பதற்காக அபுதாபிக்கு மோடி செல்கிறார். கோயிலை திறப்பதற்கு பிரதமர் தேவையில்லை. ஊர் நாட்டாமையே கோயிலை திறப்பார்.

சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
தஞ்சாவூரில் காவிரி ஆணையத் தலைவர் உருவபொம்மை எரிப்பு

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது.உடனடியாக கணக்கு காட்டப்படவில்லை என கூறி முடக்கி இருக்கிறார்கள்.அதற்கு விளக்கம்தான் கேட்க வேண்டுமே தவிர முடக்கக் கூடாது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதை ஏற்க முடியாது. தற்போதுகூட மணிப்பூரில் 4 இளைஞர்கள் சுடப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 7 ஆயிரம் துப்பாக்கிகள் மட்டுமே திரும்ப வந்திருக்கிறது. இன்னும் 3 ஆயிரம் துப்பாக்கிகள் கலகக்காரர்கள் கையிலும், ஆர்எஸ்எஸ் காரர்கள் கையிலும் இருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெறுவது தவறு என உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com