தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தன்னை தலைவராக அறிவித்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக உழைப்போம் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

2019 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரியின் பணியைக் காங்கிரஸ் தலைமை பாராட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com