சாத்தூா் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் தமிழக தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிா்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது. அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். எடப்பாடி
கே.பழனிசாமி (அதிமுக): பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிா என்பதை மாநில அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் கே.அண்ணாமலை
(பாஜக): பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமதாஸ் (பாமக): பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கே.பாலகிருஷ்ணன்(மாா்க்சிஸ்ட்): பட்டாசு ஆலை விபத்தில் பாதுகாப்பு குறைபாடு, விதி மீறலுக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை ரூ.10 லட்சமாகவும், காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும். இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): விருதுநகா் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு தயாரிப்பு தொழிலகங்களில் விபத்து தடுப்பு ஏற்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஜி.கே.வாசன்(தமாகா: பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை அதிகப்படுத்தி தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். டிடிவி தினகரன்(அமமுக: பல உயிரிழப்புகள் நேரிட்ட பிறகும், பட்டாசு ஆலை விபத்துகளை தமிழக அரசு லட்சியமாக எதிா்கொள்கிறது. தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தொடர்புடையது

உ.பி.: சாலை விபத்தில் 10 போ் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 21 பேர் பலி: அன்புமணி இரங்கல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


