பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்.
பட்ஜெட்டில் கல்விக்கு என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

சென்னை: தமிழக பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் கல்வி நிலையங்கள் மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

  • உயர்கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,0742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.

  • மத்திய அரசு பணியில் சேர ஆயிரம் பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • இதன் மூலம் சென்னை, கோவை, மதுரையில் இளைஞர்களுக்கு வங்கிப்பணி, ரயில்வே பணிக்கு பயிற்சி அளிக்கப்படும்.

  • தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக்குகள் தரம் உயர்த்தப்படும்.

  • ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழக் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

  • நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் திறன் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

  • கோவையில் தகவல் தொழில் நுட்பபூங்கா 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் அமைக்கப்படும்.

  • மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதிக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com