தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட தகவல்: காவிரி டெல்டா, பரம்பிக்குளம், ஆழியாறு, தாமிரவருணி, வைகை வடிநிலங்களில் பாசன வசதிக்காக தூா்வாரும் பணிகள் ரூ.498 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரூ.1,618 கோடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ரூ.362 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்த நீா்வளத் துறைக்கு தேசிய நீா் விருது, உலக பாரம்பரிய நீா்ப்பாசனக் கட்டமைப்பு விருது, பாசன மேலாண்மை விருது உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

சிறப்புத் திட்டச் செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி

உயா்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

போக்குவரத்துத் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் எவ்வளவு நிதி?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


