
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் ஆற்றி வரும் உரையில்,
கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் மொத்த சாகுபடி இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
உணவு தானிய உற்பத்தி 116 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மானிய விலையில் தொடர்ந்து விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.