

லுஃப்தான்ஷா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியை சேர்ந்த லுஃப்தான்ஷா விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஜெர்மனியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் லுஃப்தான்ஷா விமானமும் ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜெர்மன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.