
சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்.23) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை(பிப்.23) காலை 11.30 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.