கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேர்தல் பிரசாரம்: நாளை(பிப். 20) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது பற்றி...

News image

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் (கோப்புப்படம்)

DIN

Updated On :19 பிப்ரவரி 2026, 10:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (பிப். 20) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 20-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையாளர்கள் - தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக -தொகுதிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலையொட்டி பிப். 23 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகப் பிரசாரம் - சிறப்பாக நடத்திட வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.