பாஜகவில் இணைந்தது ஏன்? விஜயதரணி விளக்கம்
பாஜகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து விஜயதரணி விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதரணி, புது தில்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
புது தில்லியில், பாஜக தலைமை அலுவலகத்துக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு வருகை வந்த விஜயதரணி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதரணி.
பாஜகவில் விஜயதரணி இணையவிருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில், அதனை காங்கிரஸ் மறுத்துவந்தது. ஆனால், விஜயதரணி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அவர் தில்லியில் இருக்கிறார் என்று தகவல் மட்டும் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில்தான், இன்று பாஜகவில் இணைந்துள்ளார் விஜயதரணி. இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புது தில்லியில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்; தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று விஜயதரணி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களாலும் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்; தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்பெற வைப்போம்; தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது; பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...