காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அசாமில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பற்றி..

News image
பாஜக கொடி (கோப்புப்படம்)
Updated On :5 மார்ச் 2026, 6:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கமலாக்யா தே புரகாயஸ்தா, சஷிகாந்த் தாஸ் மற்றும் பசந்தா தாஸ் ஆகிய மூவரும் அசாமில் ஆளும் பாஜகவில் இணைந்தனர்.

எம்எல்ஏக்கள் மூவரும் மாநில பாஜக தலைவர் திலீப் சைகியா, மத்திய அமைச்சர் பபித் மார்கெரிட்டா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக, அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபன் போரா பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மூவர் இணைந்துள்ளனர்.

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப் பேரவைக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

புரகாயஸ்தா கரிம்கஞ்ச் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதேநேரத்தில் சஷிகாந்தா மற்றும் பசந்தா ஆகியோர் முறையே ரஹா மற்றும் மங்கல்டோய்(எஸ்சி) தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவார்கள்.

பாஜகவில் இணைந்த மற்ற இருவரும் முன்னாள் காங்கிரஸ் இணைச் செயலாளர் பர்ஷா பாப் கலிதா மற்றும் முன்னாள் திரிணமுல் காங்கிரஸ் பொது செயலாளர் கங்கன் நாத் ஆவர்.

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படும் மூன்று எம்எல்ஏக்களும் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை வெளிப்படையாக ஆதரித்து வந்தனர். சசிகாந்த் தாஸ் 2021இல் ஆளும் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.

கடந்த பிப். 22ல் போரா பாஜகவில் இணைந்தார். அதே நேரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள் அப்துல் ரஷீத் மொண்டல் மற்றும் ஷெர்மன் அலி அகமது ஆகியோர் கடந்த மாதம் ராய்ஜோர் தளத்திற்கு மாறினார்.

ரஷீத் மொண்டல் மற்றும் அகமது இருவரும் கோல்பாரா (மேற்கு) மற்றும் பாக்பாரில் இருந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Three Congress MLAs – Kamalakhya De Purakayastha, Sashikanta Das and Basanta Das – on Thursday joined the ruling BJP in Assam, along with two others, ahead of the assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.