கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிடிவி தினகரனும், பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 10:57 am

DIN

டிடிவி தினகரனும், பன்னீர் செல்வமும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அண்ணதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் தேதி அறிவித்ததும் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுகவின் கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை பொதுச்செயலாளர் வெளியிடுவார். பாஜகவின் பூச்சாண்டி வேலை அதிமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது.

பாஜக, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் இவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெங்காயத்தைப் போல் உரிக்க உரிக்க தோலாக தான் இருப்பார்கள் உள்ளே ஒன்றும் இருக்காது. தமிழக முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமை ஆணையம் அமைத்துவிட்டு, பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய போது ஓடிப்போய் ஒளிந்தவர்தான் பன்னீர்செல்வம். டிடிவி தினகரனும், பன்னீரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

காசு பணம் துட்டு மணி என்பதுதான் திமுக அரசுக்கும், நிர்வாகிகளுக்கும், உள்ள தாரக மந்திரமாக உள்ளது என்றார். பள்ளிக்கரணையில் நடைபெற்ற ஆணவ கொலை குறித்து பேசிய அவர், சமூக நீதி இருப்பதாக கூறும் திமுக ஆட்சியில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு தமிழகம் தான் தலைநகரம் போல் மாறிவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.