

டிடிவி தினகரன் புறக்கணிப்பு: மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்காக அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கவுள்ளார்.
இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் வைத்துள்ளனர்.
அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இருப்பினும், அமமுக நிர்வாகிகள் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி தரப்பினர் வைத்துள்ள பேனர்களில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.