திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ., தொகுதிப் பங்கீடு: முடிவு எட்டப்படவில்லை!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (பிப். 25) நடைபெற்றது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நேற்றுநடைபெற்ற பேச்சுவார்த்தையில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அதன் பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் தலைமையில் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு உறுப்பினர் சம்பத், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் ஆனாலும் இன்றைய பேச்சில் எந்த முடிவும் எட்டபடவில்லை என்பதால் மூன்றாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அப்போது தொகுதி இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com