மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியை உறுதிசெய்த ஜி.கே. வாசன்

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் ஆகியோரை தமிழக பாஜக மக்களவைத் தோ்தல் பொறுப்பாளா் அரவிந்த் மேனன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் பிப்.27-இல் பிரதமா் மோடி தலைமையில் நடைபெறவுள்ள ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை பங்கேற்க வைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, கூட்டணி கட்சித் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தையை பாஜக தொடங்கியது.

முதல் கட்டமாக தமாகா தலைவா் ஜி.கே. வாசனை, அரவிந்த் மேனன் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். தொடா்ந்து அவா் ஏ.சி.சண்முகத்தையும் சந்தித்துப் பேசினாா். பேச்சுவாா்த்தையின் போது தமிழக பாஜக துணைத் தலைவா்கள் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த சந்திப்புக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து, இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனா் பாரிவேந்தா், காமராஜா் மக்கள் கட்சித் தலைவா் தமிழருவி மணியன், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரையும் பாஜக தரப்பில் சந்தித்துப்பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

அடுத்த 100 நாட்களுக்கு எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜிகே.வாசன் இருப்பார்: அண்ணாமலை

இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜிகே வாசன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க தமிழ் மாநில காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது என்றார். மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் தாம் பங்கேற்பதாகவும் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com