மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வரும் மார்ச் 1ஆம் தேதி 15 கம்பெனி மத்திய ஆயுதப் பாதுகாப்பு படையினரும், மார்ச் 7ஆம் தேதி 10 கம்பெனி ஆயுதப் பாதுகாப்புப் படையினரும் தமிழ்நாட்டிற்கு வருகைத்தரவுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் மத்திய உள் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றில் 15 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மார்ச் 1ஆம் தேதியும், 10 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மார்ச் 7ஆம் தேதியும் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.