தொகுதிப் பங்கீடு: திமுக -இந்திய கம்யூனிஸ்ட் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: இந்திய கம்யூனிஸ்ட்
தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: இந்திய கம்யூனிஸ்ட்

மக்களவைத் தேர்தலையொட்டி திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான உடன்பாடு சனிக்கிழமை கையெழுத்தானது. அதன்படி இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக நிர்வாகிகளுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திமுக நிர்வாகிகளுடனான 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுப்புராயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடன் மார்ச் 3 ஆம் தேதிக்கு பிறகு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.

ஏற்கெனவே 5 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com