சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 6:52 pm

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்கவுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், 2023 ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில், ‘அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டிகள் ஒட்டியது, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடா்பான வழக்குகள்தான்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத் துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை சாா்பில், ‘சுமாா் ரூ.67 கோடி வசூலித்தது தொடா்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்எல்ஏவாக நீடிக்கிறாா். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டாா்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்.21-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.