கோப்புப்படம்
கோப்புப்படம்

நீலகிரியில் உறை பனி: தமிழகத்தில் எங்கெல்லாம் பனி பெய்யும்?

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு உறை பனி பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு உறை பனி பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக அதிகாலையில் பனி பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறை பனி பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com