செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆக. 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சுமாா் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை அமலாக்கத் துறையினா் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி ஏற்கெனவே இரு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில் கீழமை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி சாா்பில் ஜாமீன் கோரி 3-ஆவது முறையாக முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த மனு குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, அமலாக்கத் துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை ஜன. 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com